 |
 |
| |
|
எதிர்பார்ப்புகளும் யதார்த்தங்களும்
பொதுவாகவே வளைகுடா நாடுகளைப் பற்றி சில பொதுவான அபிப்ராயங்கள் நம்மவர்களிடையே உண்டு.. அதாவது , வளைகுடா நாடுகளில் செல்வம் கொழித்துக் கிடக்கிறது.. அங்கு செல்பவர்கள் எல்லாம் அவற்றை இலகுவாக அள்ளிக் கொண்டு வருகிறார்kaள் என்பதும் அவற்றில் ஒன்று. .ஆனால்,உண்மையில் இங்கே பொதுவான
நிலவரம் என்ன, இங்கே வருபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன என்பதை சொல்லுவதே இக்கட்டுரையின் நோக்கம்.. |
|
|
எதிர்பார்ப்புகளும் யதார்த்தங்களும்- 2
துபாயில் பணிபுரிபவர்களை சில பிரிவுகளாகப் பிரிக்கலாம்.. அரசு அலுவலகங்களில், அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.. இவர்கள் ஏதோ காலத்தில் செய்த புண்ணியததை இங்கே அறுவடை
செய்பவர்கள். .நல்ல சம்பளம்..காலாகாலத்தில் விடுப்பு, வங்கிகளில் கடன் பெறுவதில் முன்னுரிமை, பிற சலுகைகள் என்று கொடுத்து வைத்த புண்ணியவாளன்கள் இவர்கள். .அதிலும் சிலருக்கு தங்குமிட வசதியையும்
அரசே செய்து கொடுத்து விடுமென்பதால் ராஜ போக வாழ்க்கைதான் இவர்களுக்கு.. ஆனாலும் |
|
|
ஐக்கிய அரபு அமீரகம் - ஓர் அறிமுகம்
ஊரில் பொதுவாகச் சொல்வார்கள்"என் பையன் அரபு நாட்டில் இருக்கிறான்"என்று.. இப்படி பொதுப்படையாகச் சொல்வார்களே தவிர வளைகுடா நாடுகள் (Gulf Countries) பற்றிய விரிவான செய்திகள் நம்மவர்களுக்குத் தெரியாது..இன்னும் சிலருக்கு ,"பையன் துபாயில் இருக்கிறான்"..ஆனால்,உண்மையில் பையன் சவுதி அரேபியாவில் எங்கேனும் வேலை செய்து கொண்டிருப்பார்..
இந்த சாமானிய மனிதர்கள் மட்டும்தானா இப்படி என்றால் இல்லை..படித்தவர்களுக்கே கூட மத்திய கிழக்கு நாடுகளின் பூகோள அமைப்பில் சந்தேகம் இருக்கவே செய்கிறது. அதனை நிவர்த்தி செய்வதும், ஐக்கிய அரபு அமீரகம் பற்றிய சில செய்திகளையும் வெளிப்படுத் துவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.. |
|
|
அமீரகத்தில் தமிழர் திருநாள்
கணினியில் தமிழ் வளர்ப்பது, நல்ல தமிழில் பேசுவது போன்ற உயர்ந்த இலட்சியங்களோடு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள் அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை
இலக்கிய மற்றும் இசை விழாக்களை ஒருங்கிணைத்து தமிழர்கள் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழாவின் சிறப்பம்சமாக இந்த அமைப்பின் உறுப்பினரான கஸ்ஸாலி முகம்மது எழுதிய 'அவனுக்கென்றொரு மனம்'
என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கென்றே தமிழ் திரையுலக இயக்குனர்களில் முக்கியமானவர்களில் ஒருவராகக் கருதப்படும் சேரன் அவர்கள் தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார். |
|
|
இலக்கிய விழா
அமீரகத்தில் வாழும் ஏழைத் தொழிலாளர்களுக்காக நூலகம் ஒன்று துவங்கினால் என்ன? என்ற கேள்வி அமீரகத் தமிழிணைய நண்பர்களின் அமர்வில் எழுப்பப்பட்ட நாளிலிருந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் துவங்கினோம். நூல்களைச் சேர்த்தல், தமிழகத்திலிருந்து புத்தகங்களை வரவழைத்தல் என்ற முயற்சிக்கிடையே இந்த விழாவை யாரை வைத்த்கு நடத்துவதென்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இந்தச் சூழலில்தான் சகோதரி புதிய மாதவியின் ";ஹே!ராம்" கவிதைத் தொகுப்பு மும்பையில் வெளியிடப்பட்டு, அதன் பிரதிகளை எனக்காகவும் நண்பர்கள் சடையன் சாபு, இசாக் ஆகியோருக்காகவும் புதிய மாதவி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். |
|